கண்ணீர் கடிதம்!!!
கனா கண்டவள் -
காயத்ரி
on Saturday, October 13, 2007
/
Comments: (5)

மறக்க முடியாத மந்திரப் பொழுதுகள்
என் மனதில் மல்லிகையாய் மணம்வீசுகின்றன.
மந்திரத்தில் கட்டுண்டு கிடந்த மனதின்
மயங்கிய தருணம் உன் நினைவுகள் வருடுகிறது.
வருடிய நினைவுகள் தென்றலாய் தழுவுகிறது.
தென்றல் தழுவும்போது மொட்டுக்கள் திறக்கலாம்
ஆனால், உன் நினைவுகள் தழுவும்போது கண்ணீர்
முத்துக்கள் பிறக்கின்றன.
கண்ணீர் முத்துக்கள் கன்னம் வருடும் வேளை
சோகம் அனைத்தும் தண்ணீராய் ஓடிச்சென்று
உள்ளக் கிணற்றில் நிறைகிறது.
ஊசித் தூறலில் உடல் கீறும் குளிராய் உன்
மறுதலிப்பு வார்த்தைகள் என் உயிர் கீறி வதைக்கிறது.
சுகம் தரும் இளவெயிலாய் உன் சம்மதம் எனைச் சேராதா?
என் மனதில் மல்லிகையாய் மணம்வீசுகின்றன.
மந்திரத்தில் கட்டுண்டு கிடந்த மனதின்
மயங்கிய தருணம் உன் நினைவுகள் வருடுகிறது.
வருடிய நினைவுகள் தென்றலாய் தழுவுகிறது.
தென்றல் தழுவும்போது மொட்டுக்கள் திறக்கலாம்
ஆனால், உன் நினைவுகள் தழுவும்போது கண்ணீர்
முத்துக்கள் பிறக்கின்றன.
கண்ணீர் முத்துக்கள் கன்னம் வருடும் வேளை
சோகம் அனைத்தும் தண்ணீராய் ஓடிச்சென்று
உள்ளக் கிணற்றில் நிறைகிறது.
ஊசித் தூறலில் உடல் கீறும் குளிராய் உன்
மறுதலிப்பு வார்த்தைகள் என் உயிர் கீறி வதைக்கிறது.
சுகம் தரும் இளவெயிலாய் உன் சம்மதம் எனைச் சேராதா?
சில நேரங்களில்!!!
கனா கண்டவள் -
காயத்ரி
on Friday, October 12, 2007
/
Comments: (5)

சில நேரங்களில்!!!
ஊமை விழிகளின் உயிர்வலி கூட புரிவதில்லை
பேசும் இதழ்களின் பிதற்றல்களும் ஒலிக்கின்றன.
சில நேரங்களில்!!!
நா வறழும் நேரம் நீர் கூட கிடைப்பதில்லை
நீரால் இழுக்கப்பட்டு பிணம் கூட கிடைப்பதில்லை
சில நேரங்களில்!!!
சோகத்தின் தருணங்களில் இரு விழி நீர் கூட விழுவதில்லை
சிரிப்பின் சிகரத்திலும் இதழ் கூட விரிவதில்லை
சில நேரங்களில்
சில நிகழ்வுகளில் - சிக்கித்தவிக்கும்
சில மனிதர்கள்!!!
ஊமை விழிகளின் உயிர்வலி கூட புரிவதில்லை
பேசும் இதழ்களின் பிதற்றல்களும் ஒலிக்கின்றன.
சில நேரங்களில்!!!
நா வறழும் நேரம் நீர் கூட கிடைப்பதில்லை
நீரால் இழுக்கப்பட்டு பிணம் கூட கிடைப்பதில்லை
சில நேரங்களில்!!!
சோகத்தின் தருணங்களில் இரு விழி நீர் கூட விழுவதில்லை
சிரிப்பின் சிகரத்திலும் இதழ் கூட விரிவதில்லை
சில நேரங்களில்
சில நிகழ்வுகளில் - சிக்கித்தவிக்கும்
சில மனிதர்கள்!!!
தரிசனம்!
கனா கண்டவள் -
காயத்ரி
on Tuesday, October 9, 2007
/
Comments: (2)
தேடும் நெஞ்சம்!!!
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (4)
காவியமே!!!
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (1)
நீ!!!
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (1)
அள்ளிச் செல்!!
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (2)
உன் விழிகளில்!!!
கனா கண்டவள் -
காயத்ரி
on Thursday, September 27, 2007
/
Comments: (3)
கோவில் மணியாய் என்
குரல் கேட்டதும்
கோபுரம் பறவைகளாய் உன்
இமைகள் படபடக்கும் - அந்த
அழகைக் காணவே
ஆயிரம் முறை உன்
பெயர் சொல்லி அழைப்பேனே
ஆருயிரே!!!
குரல் கேட்டதும்
கோபுரம் பறவைகளாய் உன்
இமைகள் படபடக்கும் - அந்த
அழகைக் காணவே
ஆயிரம் முறை உன்
பெயர் சொல்லி அழைப்பேனே
ஆருயிரே!!!
நீ... நிலா!
கனா கண்டவள் -
காயத்ரி
on Sunday, September 9, 2007
/
Comments: (1)
நீ சிரிக்காவிட்டாலும்
நான் வருந்துவதில்லை!
வெண்ணிலா எப்போதும்
சிரித்துகொண்டா இருக்கிறது?
தொண்டன்!!!
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (4)
கூலிக்குச் செல்லும் தொண்டன்
தலைவன் வருகையால்
கொடியேற்றச் சென்றான்!
கட்சிக் கொடியோ பறந்தது காற்றில்
பசி எனும் இடியோ இறங்கியது வயிற்றில்!!!
கானல்!!!
கனா கண்டவள் -
காயத்ரி
/
Comments: (3)
உன் காதல் சாரலில்
நனைய விரும்பினேன்!
ஆனால் ஏனோ நீ
கானல் நீராய்
கண்களுக்கு மட்டுமே காட்சியாய்!
மௌனம்!!!
கனா கண்டவள் -
காயத்ரி
on Saturday, September 8, 2007
/
Comments: (2)
புரிந்த மொழி
புரியாத பொருள்
என்னவளே உன் மௌனம்!!!
சங்கமம்...
கனா கண்டவள் -
காயத்ரி
on Friday, September 7, 2007
/
Comments: (2)
கீதம் ராக தாளங்களின் சங்கமம்...
ஓவியம் நிஜ நிழல்களின் சங்கமம்...
மௌனம் எண்ணத் தேடல்களின் சங்கமம்....
அன்னை!
கனா கண்டவள் -
காயத்ரி
on Saturday, August 25, 2007
/
Comments: (4)
நிலவுக்குள்ளே ஒரு மின்னற்கீற்று
என் அன்னையின் முக சிரிப்பு
வருகை....!
கனா கண்டவள் -
காயத்ரி
on Saturday, July 14, 2007
/
Comments: (10)
உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடிகளும்
பிறக்கின்றன
ஒவ்வொரு நொடிகளும் இறக்கின்றன
இறந்த நொடிகளுக்கும் பிறந்த நொடிகளுக்கும்
இடையில் நான்
உயிருள்ள பிணமாய்
உனது வருகை பொய்தததால்.







