அநாதை...முகவரி இல்லாக் கடிதம்...
தனித்து மேயும் ஒற்றை ஆடு...
நெடுக உயர்ந்த பட்டமரம்...
கல்லடிப்பட்டு கதறும் நாய்க்குட்டி...
கையேந்தி நிற்கும் தெருவோரச்சிறுமி...
என்று எங்கேனும் எப்போதும் ஏதாவதொன்று
நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது
நான் அநாதை என்று...