கனவுகள் கவர்ந்த உறக்கம்...எங்கோ இலக்கின்றிச் செல்லும்
பறவையின் நுனிச்சிறகைப்
பிடித்துக்கொண்டு பறப்பதாக ஒரு கனவு...

இருண்மை தேசத்தில்
வெடித்தெழும்பும் ஒளிப்பிரளயத்தினின்று
தேவதை உதிப்பதாக ஒரு கனவு....

கைப்பறித்து  மண்ணிலிட்ட விதை
நீர் விடும் முன்  நெடுமரமாக
நிமிர்வதாய் ஒரு கனவு...

கனவின் பொருள் புரியாமல்
சாமத்தில் விழித்தெழும்
சாபம் பெற்றவளாய் நான்...