ஹைக்கூ!குளம் நிறையக் கோலங்கள்
கல் எறிந்தவனின்
கைவண்ணம்...

ஹைக்கூ!காகக் கூட்டில்
குயிலின் ஜனனம்...
வாடகை தாய்..

ஞாபகங்கள்!உன் பிரிவால் சிதிலமடைந்துவிட்ட
என் உள்ளச்சுவரெங்கும்
உன் ஞாபகச்சிலந்திகள்...

வலையில் சிக்கிய வண்டுணவாய்...
நானும் என் நிகழ்காலமும்
சிதைந்துகொண்டே...

பேசும் காதல்!ஊமைக் குழந்தை
உன் கையில்
பொம்மையாகிப்போனேன் நான்...

உன் அசைவுக்கும்
என் இசைவுக்கும் இடையே
ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறது
நம் காதல்....