மலடியின் மனது... (மலடி இவளின் துணைப்பெயர்)













கல்லெறிந்த குளமாய் மனம்
கலங்கித்தான் போகிறது...

மலடி எனும் மூன்றெழுத்தே
என் பெயராகிப் போனதில்...

எரியூட்டப்பட்ட சிதையாய் மனம்
எழுந்தாலும் இறுதியில்
எஞ்சுவதென்னவோ கொஞ்சம்
மௌனச் சாம்பலே...

மகரந்தம் சுமக்கும்
மலராகப் பிறந்திருக்கலாம்
மண் துளைத்து முளைக்கும்
விதைகளை ஈன்றிருப்பேன்...

மழைத்துளிகளை தாங்கும்
சிப்பியாகப் பிறந்திருக்கலாம்
மணிக்கழுத்தில் தவழும்
முத்துக்களை ஈன்றிருப்பேன்...

பெண்ணாகப் பிறந்து
மண்ணாகிப் போன வயிற்றால்...

கவலைக் கருவைச்சுமக்கும் என்
கண்கள்...
கண்ணீர்த் துளிகளை அல்லவா
பிரசவிக்கின்றன..?!

தேவதையின் வரம் கேட்ட எனக்கு...
சாத்தானின் சாபமே
சாஸ்வதமாகிப் போனதேன்?

அந்த தேவதை என்போல்
பெண்ணில்லையோ... - இல்லை

அவளுக்கு இதுபோல்
விதியில்லையோ...

தெய்வமே உனக்கு
விழியில்லையோ...

தென்றலே என்வாசலில்
வழியில்லையோ...

--- உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதிய கவிதை இது...


79 comments:

விஜய் said...

நிரம்ப வலியுடனிருக்கிறது கவிதை

வெற்றிபெற நெஞ்சார்ந்து வாழ்த்துகிறேன்

விஜய்

சீமான்கனி said...

படிக்கும்போது கண்கள் கசிந்து விடுகின்றன தோழி...வெற்றிக்கு வாழ்த்துகள்...

Thenammai Lakshmanan said...

//பெண்ணாகப் பிறந்து
மண்ணாகிப் போன வயிற்றால்...//

நிஜமாகவே வருத்தம் தந்த வரிகள் காயத்ரி வெற்றி பெற வாழ்த்துக்கள்

sakthi said...

நல்லா இருக்கு..! நண்பரே...!

சந்தான சங்கர் said...

யாக்கை தர
மறுத்த பிரசவம்
போக்கை புரிந்த
மனதின் கரு
வழியற்று பிரசவித்தது
வலியுடன் கவிதைகளை..



வாழ்த்துக்கள் தோழி...

காயத்ரி said...

//நிரம்ப வலியுடனிருக்கிறது கவிதை

வெற்றிபெற நெஞ்சார்ந்து வாழ்த்துகிறேன்

விஜய்//

கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி திரு. விஜய் அவர்களுக்கு... தொடர்ந்து வரவேற்கிறேன்..

காயத்ரி said...

//படிக்கும்போது கண்கள் கசிந்து விடுகின்றன தோழி...வெற்றிக்கு வாழ்த்துகள்...//

திரு சீமாங்கனி அவர்களே...மிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்... மீண்டும் வருக...

காயத்ரி said...

//நிஜமாகவே வருத்தம் தந்த வரிகள் காயத்ரி வெற்றி பெற வாழ்த்துக்கள்//

Thenammailakshmanan அவர்களே... கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்...
தொடர்ந்து தங்களை வரவேற்கிறேன்..

காயத்ரி said...

//நல்லா இருக்கு..! நண்பரே...!//

மிகவும் நன்றி சக்தி அவர்களே... வருகைக்கும், கருத்துக்கும்... மீண்டும் வருக...
உங்கள் தோழி...

காயத்ரி said...

//யாக்கை தர
மறுத்த பிரசவம்
போக்கை புரிந்த
மனதின் கரு
வழியற்று பிரசவித்தது
வலியுடன் கவிதைகளை..
வாழ்த்துக்கள் தோழி...//

சந்தான சங்கர் அவர்களே... என் கவிதையை விட உங்கள் பின்னூட்டக் கவிதை மிகவும் அருமை.. நன்கு ரசித்தேன்... வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றிகள்... தொடர்ந்து வரவேற்கிறேன்...

pokkisha kavithaigal said...

கவலைக் கருவைச்சுமக்கும் என்
கண்கள்...
கண்ணீர்த் துளிகளை அல்லவா
பிரசவிக்கின்றன..?!

இந்த வரிகள் மிக அருமை..

உருக்கமான கவிதை
வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி...
அன்புடன்... பார்த்த சாரதி..

கமலேஷ் said...

கவிதை மிகவும் அழகா இருக்கிறது...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...

காயத்ரி said...

//உருக்கமான கவிதை
வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி...
அன்புடன்... பார்த்த சாரதி..//

ரொம்ப நன்றிங்க பார்த்த சாரதி... வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.. தொடர்ந்து வரவேற்கிறேன்..

காயத்ரி said...

நன்றிங்க கமலேஷ்... வருகை தந்து வாழ்த்தியதற்கு.. தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்..

Saravana kumar said...

மிகவும் அருமை.பட்டு கத்திரித்தார் போல நறுக்கென்று இருந்தது. தாங்கள் வார்த்தைகளை கையாளும் விதம் அருமை.

காயத்ரி said...

//பட்டு கத்திரித்தார் போல நறுக்கென்று இருந்தது.//

அழகான வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல சரவணன்... தொடர்ந்து அன்புடன் வரவேற்கிறேன்...

Vishnu... said...

அருமை கவிதை தோழியே ,,

தாய்மை அடையா
தாயின் வலிகளை
அருமையாய் செதுக்கி இருக்கிறாய் அற்புதமான வார்த்தைகளால்...


போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்களோடு
என்றும் இனிய தோழன்
விஷ்ணு

காயத்ரி said...

//தாய்மை அடையா
தாயின் வலிகளை
அருமையாய் செதுக்கி இருக்கிறாய் அற்புதமான வார்த்தைகளால்...//

அருமை நண்பரின் வருகைக்கும் அன்பு வாழ்த்துக்களுக்கும் என் இனிய நன்றிகள்.... மீண்டும் வருக வருக என வரவேற்கிறேன்...

பூங்குழலி said...

எரியூட்டப்பட்ட சிதையாய் மனம்
எழுந்தாலும் இறுதியில்
எஞ்சுவதென்னவோ கொஞ்சம்
மௌனச் சாம்பலே

வேதனையை அழுந்தச் சொல்லும் வரிகள் .

தென்றலே என்வாசலில்
வழியில்லையோ...

அருமை

வாழ்த்துகள்

காயத்ரி said...

//வேதனையை அழுந்தச் சொல்லும் வரிகள் .
தென்றலே என்வாசலில்
வழியில்லையோ...
அருமை
வாழ்த்துகள்//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அக்கா... தொடர்ந்து உங்களை உவகையுடன் வரவேற்கிறேன் என்றும்...

S.A. நவாஸுதீன் said...

///கவலைக் கருவைச்சுமக்கும் என்
கண்கள்...
கண்ணீர்த் துளிகளை அல்லவா
பிரசவிக்கின்றன..?!///

கவிதை அருமை என்று சொல்ல தடை போடுகிறது வரிகளில் உள்ள வலி.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி.

ப்ரியமுடன் வசந்த் said...

//பெண்ணாகப் பிறந்து
மண்ணாகிப் போன வயிற்றால்...//

ப்ச்..ஏங்க...

வாழ்த்துக்கள்....

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்கு காயத்ரி.வெற்றி பெற வாழ்த்துக்கள்!

அன்புடன் மலிக்கா said...

வரிகள் வேதனையில் குளிக்கிறது. வெற்றிபெறவழ்த்துக்கள்..

/http://niroodai.blogspot.com/2009/12/blog-post_07.html/

பூங்குன்றன்.வே said...

வலிதரும்,ஆறுதல் தர முடியா கவிதை,வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Marimuthu Murugan said...

அருமை...
வெற்றி பெற வாழ்த்துக்கள்...

காயத்ரி said...

//கவிதை அருமை என்று சொல்ல தடை போடுகிறது வரிகளில் உள்ள வலி. //

மிக்க நன்றி நண்பர் நவாசுதீன் அவர்களே... வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...
மீண்டும் உங்களை வரவேற்கிறேன்..

காயத்ரி said...

பிரியமுள்ள வசந்த் அவர்களுக்கு, என் இனிய நன்றிகள்... உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.. மீண்டும் உங்களை வருகவென வரவேற்கிறேன்...

காயத்ரி said...

//வரிகள் வேதனையில் குளிக்கிறது. வெற்றிபெறவழ்த்துக்கள்..//

அன்புள்ள மலிக்கா, உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... தொடர்ந்து உங்களை வரவேற்கிறேன்...நன்றி...

காயத்ரி said...

திரு பூங்குன்றன் அவர்களே உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் உள்ளம் கனிந்த நன்றிகள்...மீண்டும் வந்து வாழ்த்த வரவேற்கிறேன்..

காயத்ரி said...

மிக்க நன்றிகள்... முத்து... மீண்டும் வருக...

காயத்ரி said...

மனமார்ந்த நன்றிகள்... திரு ராஜாராம் அவர்களே.. தொடர்ந்து வரவேற்கிறேன்...

Vidhoosh said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Paleo God said...

கத்தி சொருகும் கவிதை பாராட்டுக்கள்..

காயத்ரி said...

ரொம்ப நன்றிங்க விதூஷ், வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.. மீண்டும் வருக...

காயத்ரி said...

நன்றிங்க தியா.... மீண்டும் உங்களை வரவேற்கிறேன்...

காயத்ரி said...

பலா பட்டறை நண்பருக்கு, என் இனிய நன்றிகள்... மீண்டும் வருகவென வரவேற்கிறேன்..

அவனி அரவிந்தன் said...

அழுத்தமாகப் பதிகிறது. ஒரு பாடல் போலச் சென்றாலும் இறுதியில் இறுக்கமான ஓலமாக முடிகிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள் !

காயத்ரி said...

மிக்க நன்றி நண்பர் அரவிந்தன்... வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்... தொடர்ந்து உங்களை அன்புடன் வரவேற்கிறேன்..

கண்மணி/kanmani said...

இந்தக் கவிதையை இதற்கு முன்பும் படித்திருந்தாலும் பின்னூட்டம் போட துணிவில்லை.இத்தகைய வலியை வாழ்த்துவதா என்று??
இருந்தும் என் வருகையைப் பதிவு செய்கிறேன் இன்று

கவியழகன் said...

மகரந்தம் சுமக்கும்
மலராகப் பிறந்திருக்கலாம்
மண் துளைத்து முளைக்கும்
விதைகளை ஈன்றிருப்பேன்...

மழைத்துளிகளை தாங்கும்
சிப்பியாகப் பிறந்திருக்கலாம்
மணிக்கழுத்தில் தவழும்
முத்துக்களை ஈன்றிருப்பேன்... ///

அருமை தோழி :)

காயத்ரி said...

//இருந்தும் என் வருகையைப் பதிவு செய்கிறேன் இன்று//

மிக்க நன்றி... அன்புள்ள கண்மணி அவர்களே...

மீண்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்..

காயத்ரி said...

//அருமை தோழி :)//

தாங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும், என் இனிய நன்றிகள்...
நண்பர் கவியழகன்.... மீண்டும் உங்களை இனிதே வரவேற்கிறேன்...

ராமலக்ஷ்மி said...

வேதனையை வரிகளில் வடித்திருக்கும் விதம் நன்று.

தலைப்பு வலியே. //துணைப்பெயர்// வித்தியாசமான சிந்தனை.

வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்.

காயத்ரி said...

மிக்க நன்றி... அன்புள்ள ராமலக்ஷ்மி அவர்களே... உங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்.. மீண்டும் வருக...

ராம்குமார் - அமுதன் said...

அருமையான கவிதை... வெற்றி பெற வாழ்த்துக்கள்....

காயத்ரி said...

மிக்க நன்றி நண்பர் ராம்குமார் அவர்களே... மீண்டும் வருக...

Anonymous said...

வாழ்த்துக்கள் சகோதரி !!!

சங்கர்

காயத்ரி said...

மிக்க நன்றி திரு. சங்கர்.... மீண்டும் உங்களை வரவேற்கிறேன்....

viji lakshmi said...

எனதன்பு தோழி கவி உண்மையிலேயே மிகவும் அருமையான கவிதைகள். மீண்டும் வெற்றி பெற வாழ்த்தும்....VIJI

Vith@g@n said...

அந்த தேவதை என்போல்
பெண்ணில்லையோ... - இல்லை

அவளுக்கு இதுபோல்
விதியில்லையோ...

தெய்வமே உனக்கு
விழியில்லையோ...


sirandha varigal....

Anonymous said...

vetri pera valthukkal..

thiyaa said...

அருமை
நல்ல நடை
நல்ல பதிவு
வாழ்த்துகள்

Pinnai Ilavazhuthi said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி...

காயத்ரி said...

எனதன்பு தோழி விஜி... முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... மீண்டும் வருக..

காயத்ரி said...

//sirandha varigal....//

மிக்க நன்றி... நண்பர் ராஜா... வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் என் இனிய நன்றிகள்... மீண்டும் வருக...

காயத்ரி said...

வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்

என் இனிய நன்றிகள் தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்... மீண்டும் உங்களை வரவேற்கிறேன்...

காயத்ரி said...

//vetri pera valthukkal..//

அன்பு அரசி அவர்களுக்கு, என் இனிய நன்றிகள் தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்... மீண்டும் உங்களை வரவேற்கிறேன்...

காயத்ரி said...

//அருமை
நல்ல நடை
நல்ல பதிவு
வாழ்த்துகள்//

அன்பு தியா அவர்களுக்கு, என் மனமார்ந்த நன்றிகள்... தங்களது வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.. மீண்டும் வருக...

காயத்ரி said...

//வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி...//

எனது இதயம் கனிந்த நன்றிகள்... திரு.இளவழுதி வீரராசன்... தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்... மீண்டும் வருக....

காயத்ரி said...

//வாழ்த்துக்கள் சகோதரி !!!

சங்கர்//

முகம் தெரியாத நண்பர் சங்கருக்கு என் நன்றிகள்... மீண்டும் வருக...

Kripa said...

படித்த வலி தாங்கமுடியாமல் இந்த பின்னூட்டம்... மிக அருமை...

பிறக்கும் குழந்தை பெண் என்று அறிந்து அந்த புனிதமான கருவறையை கல்லறையாக்கும் மனிதனுக்கும்...
சில கருவறையையே கல்லறையாக கொடுக்கும் தெய்வத்திற்கும் நடக்கும் போராட்டம்...
தெய்வம் மட்டும் எப்போதும் வெல்கிறது...
ஆகவே.... நாம் மனிதர்களாகவே இருப்போம்... எப்போதும் தெய்வத்தின் வேலையை செய்ய என்ன வேண்டாம்... சிசுக்கொலை வேண்டாம்...

வெற்றி பெற வாழ்த்துக்கள்....

- கிருபா. சரவணன்

kovai sathish said...

நல்ல வலி....
வெற்றி பெற வாழ்த்துக்கள்..?!

கமலேஷ் said...

என்னாச்சு மேடம் புது வருசமும் பொறந்திட்டு வேற எதுவும் இன்னும் எழுதலையா...ரொம்ப நாள் ஆகிடுச்சு..

Sakthi said...

வெற்றிபெற நெஞ்சார்ந்து வாழ்த்துகிறேன்

Sakthi said...

superb yaar..

காயத்ரி said...

மிக்க நன்றி நண்பர் கிருபா. சரவணன்... முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்....மீண்டும் வருக...

காயத்ரி said...

மிக்க நன்றி.. சதீஷ்.. உங்கள் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன்... மீண்டும் வருக...

காயத்ரி said...

கண்டிப்பாங்க கமலேஷ்... கொஞ்சம் வேலைகள் அதிகமாயிடுச்சு, அதனால்தான்... சீக்கிரம் வருவேன்... மிக்க நன்றி தொடரும் உங்கள் ஆதரவுக்கு....

காயத்ரி said...

நன்றி சக்தி.... முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்... தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்.. நன்றி...

Arun Jeevan said...

real feeling..

nice poem..

all the best to win...

saraboji said...

very nice thought,
your feeling is very nice...,

காயத்ரி said...

மிக்க நன்றி.. அருண் ஜீவன்... தொடர்ந்து வருக...

காயத்ரி said...

நன்றிகள் பல... சரபோஜி... தொடர்ந்து வருக...

Rajesh said...

better revisit last six lines. It will remember all the usual lines people use to express. Something peculiar should be there for competition.All the best

காயத்ரி said...

@ ராஜேஷ்..

மிக்க நன்றி நண்பரே.. உங்களின் கருத்தாழமிக்க பின்னூட்டத்தை நான் வரவேற்கிறேன்...
நான் இன்னும் தீவிரமாக முயற்ச்சிக்கிறேன்... மிக்க நன்றி முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்....

Srini said...

உருக்கமான கவிதை
வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி...

கவிநா... said...

@ ஸ்ரீனி

மிக்க நன்றி தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும்....

கவிநா... said...

இந்தக் கவிதை போட்டியில் தோற்றுவிட்டது... ஆனாலும் உங்கள் அனைவர் மனதிலுமிருந்து வந்த
கருத்துக்களும் வாழ்த்துக்களும் சொல்கிறது, நான் வென்றுவிட்டேன் என்று..

உங்கள் கருத்துக்களையே இந்த கவிதைக்கான எனது பரிசாக எடுத்துக்கொண்டேன்....

வருகை தந்து வாழ்த்திய அனைத்து தோழர், தோழிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...