என் செய்தாய் அன்பே?


என் இரவுக்குள்ளே இரைத்துவிட்டானோ
வானவில்லின் சாயங்களை
கனவுகள் எல்லாம்  வர்ணங்களில்...

என் இதயத்துக்குள்ளே இசைக்கவிட்டானோ
காட்டுக்குயிலின் கானங்களை
துடிப்புகள் எல்லாம்  ராகங்களில்...

என் உயிருக்குள்ளே உலவவிட்டானோ
நிம்மதியின் சாரங்களை
நினைவுகள் எல்லாம் சொர்க்கங்களில்...

17 comments:

Saravana kumar 9629455729 said...

பட்டய கிளப்பிட்ட கவி. வார்த்தைகள் சூப்பர்.

Sivaji Sankar said...

நச்....

க.பாலாசி said...

அருமை.... நல்லாயிருக்குங்க...

அஹமது இர்ஷாத் said...

நல்லாயிருக்கு...

seemangani said...

கனவு கள்வனின் ராகங்கள் கனவில் மட்டுமல்லாமல் நினைவிலும் வசிக்க வாழ்த்துகள்...தோழி...கவிதை சூப்பர்...

காயத்ரி said...

ரொம்ப சந்தோசமா இருக்கு சரவணா... நன்றி..

காயத்ரி said...

@ சிவாஜி சங்கர்

நன்றி நண்பரே...

காயத்ரி said...

@ பாலாசி

மிக்க நன்றி நண்பரே...

காயத்ரி said...

@ அஹமத் இர்ஷாத்

மிக்க நன்றி நபரே, முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...

காயத்ரி said...

@ சீமாங்கனி

ஒவ்வொரு கவிதைக்கும் சரியாக வந்து வாழ்த்தும் உங்கள் அன்பு உள்ளத்துக்கு நன்றி..
என்றும் உங்கள் ஆதரவு தொடரட்டும்... மிக்க நன்றி நண்பரே..

Sathish said...

வார்த்தைகளின் வித்தையை உன்னிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்...
அழகு..!!

காயத்ரி said...

@ சதீஷ்

மிக்க நன்றி சதீஷ்.. சந்தோசமா இருக்கு.. அடிக்கடி வாங்க..

ரசிகன்! said...

மீள்கின்றன காதல்!!!

:)

காயத்ரி said...

@ ரசிகன்...

நன்றி ரசிகன்.. முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும்.. மிகவும் மகிழ்ந்தேன்... மீண்டும் வருக...

சேட்டைக்காரன் said...

தங்களது வலைப்பூவைக் குறித்து 14-05-2010(வெள்ளி) "வலைச்சரம்" இடுகையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com
வருகை தருக! நன்றி! -சேட்டைக்காரன்

Discovery book palace said...

உங்கள் பிளாகிற்கு நான் புதிது. கனவுலகம் உங்கள் கவிதைகளில் உருவம்கொண்டு கண்முன் வந்து நின்றுவிடுகிறது.வாழ்த்துக்கள். கவிதைதான் அப்படியென்றால் உங்கள் பிளாக் வடிவமைப்பும் அப்படிதான் இருக்கிறது.
(உண்மை வெறும் புகழ்ச்சி யில்லை)

கவிநா... said...

@ சேட்டைக்காரன்
மிக்க நன்றி நண்பரே.. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கு, வலைச்சரம் இடுகைக்கும்.... இதயம் கனிந்தேன்..
மீண்டும் வருக...

***

@ Discovery of Book Palace
மிக்க நன்றி, முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்... மனம் மகிழ்ந்தேன் உங்கள் வாழ்த்துக்கள் கண்டு... மீண்டும் வருக...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...