பிரிவு!!!!


எச்சில் விழுங்கி
ஈரப்படுத்திக்கொண்ட தொண்டையில் - இன்னும்
மிச்சமிருக்கிறது
உனக்கான என் அழுகை...

நீ என்னைப் பிரிந்தநாளின் துயரம் - என்
மனச்சுவற்றின் மேல் எம்பிக்குதிக்கிறது
உன்னுடனான இனிய நினைவுகளால்
மனச்சுவற்றின் உயரத்தை நீட்டித்துக்கொள்கிறேன்...

உண்மை சொல்லி - மனம்
உரக்கக் கத்தினாலும்
கண்ணில் வழியும் கண்ணீர் - அதன்
சத்தத்தைத் தன்னோடு கரைத்துக்கொண்டோடுகிறது...

7 comments:

கே.வி.எஸ். சக்திவேல் said...

வணக்கம் தோழி... மிகவும் அருமையான கவிதை... வாழ்த்துக்கள்..

shiva said...

viruppam illai

D.R.Ashok said...

கவிதையின் வருத்தத்தோடு நானும் கலந்துக்கொள்கிறேன் :)

விஜய் said...

கவிதையின் வலி காதல் வழி

விஜய்

seemangani said...

வலியோடு வழிந்த கவி அழகு...அழகு...
வாழ்த்துகள்...தோழி...

கவிநா... said...

@ KVS. சக்திவேல்
மிக்க நன்றி நண்பரே... மீண்டும் வருக...

***

@ சிவா
நன்றி சிவா, மீண்டும் வருக..

***

@ DR. அசோக்
இனிய நண்பருக்கு இதயம் கனிந்த நன்றிகள்... மீண்டும் வருக

***

@ விஜய்
ரசித்தமைக்கு நன்றிகள்.. மீண்டும் வருக நண்பரே.. வாழ்த்துக்கள்..

***

@ சீமாங்கனி
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே... மீண்டும் வருக...

கவிநா... said...

இந்த கவிதை "பண்புடன் மின்னிதழ்"-இல் வெளியாகியுள்ளது...
நன்றி : பண்புடன் குழுமம்

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...