பிரிவுத்தூறல்...!



















தூறும் மழைச்சாரலும்
உன் புன்னகையும்
ஒன்றெனவே தோன்றியது
நம்முடன் கைகோர்த்து நாட்கள் நடந்தபோது...

இன்று...

நாட்காட்டிக் காகிதங்கள்
என்னைக் கிழித்துத்
தன்னைத் தொலைக்கிறது...

இன்றும் உன்னை ஒப்பிடுகிறது மனது...

வெடித்துக்கிடக்கும் நிலத்தைப்பார்த்து
வெளிரிச்சிரிக்கும் மேகத்தோடு...!


8 comments:

கணேஷ் said...

நல்ல வரிகள்...அதற்கு ஏற்ப படமும் நல்லா இருக்கு...

அதிரை என்.ஷஃபாத் said...

ஆஹா.. ஆஹா.. கவிதை அத்தனையும் அழகு..


இதையும் படிங்க...

www.aaraamnilam.blogspot.com

Saravana kumar said...

//நாட்காட்டிக் காகிதங்கள்
என்னைக் கிழித்துத்
தன்னைத் தொலைக்கிறது...

இது நல்லா இருக்கு......!
படம் அருமை என்று சொன்ன நண்பருக்கு நன்றி

கவிநா... said...

@ கணேஷ்

நன்றிங்க கணேஷ். படம் தேடிக்கொடுத்தவர் நண்பர் திரு.சரவணன். அவரும் உங்களுக்கு நன்றி சொல்லிட்டார். மீண்டும் வருக.

***

@ அருட்புதல்வன்

மிக்க நன்றிங்க சகோ, முதல் வருகைக்கும் கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கும். உங்கள் தளம் வந்தேன். ரசித்தேன்... கருத்துரையிட்டேன். மிக்க மகிழ்ச்சி.

***

@ சரவணன்

சரவணா, இந்த முறை பின்னூட்டத்தில் உன்னை இரண்டு பேர் முன்திட்டாங்கப்பா. ரசித்தமைக்கும், படம் அளித்து உதவியதற்கும் நன்றி நன்றி நன்றி....

விஜய் said...

"வெளிரிச்சிரிக்கும் மேகத்தோடு"

அட்டகாசம் சகோ

வாழ்த்துக்கள்

படம் அருமை சரவணா


விஜய்

பால்ராஜ் said...

கவிதையும் காட்சியும் அற்புதம்!

பிரசாத் வேணுகோபால் said...

ரொம்ப நேரம் கழிச்சு தான் புரிஞ்சது... ஏன்னா முதலில் மழைச்சாரலுடன் புன்னகையை ஒப்பிட்டுவிட்டு பிறகு வெடித்துக்கிடக்கும் நிலத்தைப் பார்த்து வெளிரிச்சிரிக்கும் மேகத்தை அவளு(னு)டனோ ஒப்பிடுவது குழப்பத்திற்கு வழிகோலி விட்டது... அவளி(னி)ன் புன்னகைன்னே அங்கேயும் போட்டிருந்திருக்கலாம்...

கவிநா... said...

@ விஜய்

நன்றி அண்ணா...

***

@ பால்ராஜ்

நன்றி நண்பரே.... முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும். மீண்டும் வருக...

***

@ பிரசாத் வேணுகோபால்

அண்ணா, நன்றி... கவிதையை ஊன்றி கவனித்து பின்னூட்டமளித்ததற்கு.
புன்னைகையுடன், மழைச்சாரலை ஒப்பிட்டேன்.
பின்பு, "இன்றும் உன்னை ஒப்பிடுகிறது மனது..." என்ற வரியில், "உன் புன்னகையை"
என்று எழுதியிருக்கலாம்.
ஆனால், ஒரே வார்த்தை மீண்டும் வருவதை தவிர்க்க எண்ணியே "உன்னை" என்று எழுதினேன்.

ஆனால், எது எப்படியோ, கொஞ்சம் நேரம் என் கவிதையை படித்திருக்கிறீர்கள். நன்றி அண்ணா...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...