கண்ணீர் கடிதம்!!!
மறக்க முடியாத மந்திரப் பொழுதுகள்
என் மனதில் மல்லிகையாய் மணம்வீசுகின்றன.
மந்திரத்தில் கட்டுண்டு கிடந்த மனதின்
மயங்கிய தருணம் உன் நினைவுகள் வருடுகிறது.
வருடிய நினைவுகள் தென்றலாய் தழுவுகிறது.
தென்றல் தழுவும்போது மொட்டுக்கள் திறக்கலாம்
ஆனால், உன் நினைவுகள் தழுவும்போது கண்ணீர்
முத்துக்கள் பிறக்கின்றன.
கண்ணீர் முத்துக்கள் கன்னம் வருடும் வேளை
சோகம் அனைத்தும் தண்ணீராய் ஓடிச்சென்று
உள்ளக் கிணற்றில் நிறைகிறது.
ஊசித் தூறலில் உடல் கீறும் குளிராய் உன்
மறுதலிப்பு வார்த்தைகள் என் உயிர் கீறி வதைக்கிறது.
சுகம் தரும் இளவெயிலாய் உன் சம்மதம் எனைச் சேராதா?

5 comments:

மஞ்சூர் ராசா said...

இந்த கண்ணீர் கவிதையில் இனம் புரியாத மனதுக்குள் புழுங்கிக்கொண்டிருக்கும் சோகம் இழையோடுகிறது.

Vishnu... said...

கவினா,...
அவர்களே

சம்மதம் வேண்டி
விண்ணப்பித்த
உங்கள் "கண்ணீர் கடிதம்"!!!..
உண்மையில் கண்ணீரை
வரவழைக்கிறது ...

அனுபவித்தவர்களால்
மட்டுமே இத்தனை
அழகாக எழுத முடியும்
நீங்கள் எப்படியோ ...
ஆனால்
உண்மையில் அருமை ,...

என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ,..

இனியவள் said...

கண்ணீரால் வடித்த கவிதை இனிமையாக இருக்கின்றது

வாழ்த்துக்கள்!!

kavina said...

உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள்
உங்கள் ஆதரவு என்றும் எனக்கு தேவை!

அன்புடன் கவிநா!

Vishnu... said...

புதிய கவிதைகள் பிறக்காததன் காரணம் என்னவோ ...
தோழியே ..

அன்புடன்
என்றும் இனிய தோழன்
விஷ்ணு

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...