எதிர்த்துருவ விழிகள்...!ஓடும் நீரையும் சிறைபிடிக்கும் புகைப்படமாய்...
நகரும் என் நிகழ்காலத்தைச்
சிறைபிடிக்கிறது உன்
காதல் கயல்விழிகள்...

எனை வஞ்சிக்கும் என்னமோ வஞ்சியுனக்கு?
காதற்பஞ்சும் கன்னி உன்
பார்வை நெருப்பும்
பற்றிக்கொண்டு எரியுதடி
பரந்த என் நெஞ்சில்...

உன் ஒற்றைத்துளிக் கண்ணீர்
எனக்கெனச் சுரந்தால் போதுமடி...
என் நெஞ்சத்து நெருப்பணைத்துக் குளிரூட்ட...
தீயாய் நீயும், நீராய் நானும்
நீ என்னை எரித்துக்கொண்டும்!
நான் உன்னை நனைத்துக்கொண்டும்!

எதிரெதிர்த்துருவங்கள் ஈர்க்குமாமே!
நீ என்னை ஈர்க்கிறாய்...
உண்மையைச் சொல்...
நான் உன்னை???...

5 comments:

ராம்ஜி_யாஹூ said...

your blog screen is filled with so much jimmics like shankar film,

seemangani said...

//தீயாய் நீயும், நீராய் நானும்
நீ என்னை எரித்துக்கொண்டும்!
நான் உன்னை நனைத்துக்கொண்டும்!//

ரசித்தேன்...சித்தேன் த்தேன் தேன்....கவிதை....
வாழ்த்துகள் தோழி....

ganesh said...

நன்றாக இருக்கின்றது...வாழ்த்துக்கள்...மற்ற கவிதைகளையும் ரசித்து படித்தேன்...

Saravana kumar 9629455729 said...

நிச்சயமாக என்னையும் ஈர்க்கிறது

கவிநா... said...

@ ராம்ஜி யாஹு
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே... மகிழ்ந்தேன்... மீண்டும் வருக..

@ சீமாங்கனி
நானும் ரசித்தேன் உங்கள் பின்னூட்டத்தை.. மிக்க நன்றி.. மீண்டும் வருக...

@ கணேஷ்
மிக்க நன்றி நண்பர் கணேஷ்... மீண்டும் வந்து வாழ்த்த வேண்டுகிறேன்..

@ சரவணா
நன்றி சரவணா...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...