கனவோடு வா...

விளக்கு உமிழும் வெளிச்சத்தில்
நிறம் மாறும் சுவர்ப்பூச்சு...

ஓயாமல் சுழன்று
பெருமூச்செறியும் மின் விசிறி...

காற்றின் வேகத்தில் படபடத்துச்
சிரிக்கும் நாட்காட்டிக் காகிதங்கள்...

அயராது உழைக்கும்
கடிகார முட்களின் காலடி ஓசை...

என,

உயிரற்ற பொருட்களெல்லாம்
உயிர்ப்புடன் உலவிக்கொண்டிருக்க...

என் உறக்கத்திற்கும் உயிர்கொடுக்க
உன் கனவுகளைப் பரிசளித்தது இந்த இரவு...!

இரவோடு வரும் கனவோடு வா உயிரே...!!!


3 comments:

seemangani said...

நிசப்த்த இரவில் கல்லெறிந்து கனாகளைக்கும் காரணிகளின் கவிதை அழகு...வாழ்த்துகள் தோழி...

seemangani said...

ஐ நான்தான் பஸ்ட்டு...

கவிநா... said...

ஹ்ம்ம்.. நீங்க தான் பஸ்ட்... மிக்க நன்றிங்க திரு.சீமாங்கனி...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...