உடையும் கனவுகள்!






மஞ்சள்வெயில் மாலையில்
மெல்ல நகரும் முகில்கள்...
காற்றோடு
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
உரசிச்செல்வதைப்போல

என் நெஞ்சமெங்கும்
உன் நினைவுகள்...

சோப்புக்குமிழிகளாய்
உயிர்பெறும் உன் நினைவுகளைச் 
சிறுகுழந்தையாகிச் சிலாகிக்கிறேன்...
உடைந்துவிடும் எனத்தெரிந்தும்...







7 comments:

Saravana kumar said...

//சோப்புக்குமிழிகளாய்
உயிர்பெறும் உன் நினைவுகளைச்
சிறுகுழந்தையாகிச் சிலாகிக்கிறேன்...
உடைந்துவிடும் எனத்தெரிந்தும்...

நல்ல வார்த்தை பிரயோகம். என்ன சொல்றது உங்க கவிதையின் மாந்தர்களை யாரு வேணாலும் உணரலாம். அனைவருக்கும் பொருந்தும்.

சீமான்கனி said...

சிலாகித்த கவிதையில் சிலிர்த்து போனேன் அருமை தோழி...

விஜய் said...

கவிதை முகிலின் உரசலில் உயிர்க்கிறது குமிழ்கள்

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

பிரசாத் வேணுகோபால் said...

நல்லா இருக்கு சகோ...

Anonymous said...

/**
சோப்புக்குமிழிகளாய்
உயிர்பெறும் உன் நினைவுகளைச்
சிறுகுழந்தையாகிச் சிலாகிக்கிறேன்...
உடைந்துவிடும் எனத்தெரிந்தும்...
**/

அருமையான வரிகள்... பழைய நினைவுகள கிளறி விட்டுடிச்சி...

Unknown said...

உங்கள் பக்கமே கவிதையாய் இருக்கிறது.கர்சரை வைத்தால் பட்டாம்பூச்சிகள் அமருமோ?


எல்லாவற்றையும் படித்தேன் கவிநா.நன்று. நீங்கள் அடுத்தக் கட்டத்திற்கு நகருங்கள்.

நன்றி.

கவிநா... said...

@ சரவணா
நன்றி சரவணா... தொடரும் உன் அன்புக்கு நன்றி...

***

@ சீமான்கனி
மிக்க நன்றி நண்பரே... சிலிர்த்ததை ரசித்தேன்... மீண்டும் வருக..

***

@ விஜய்
உங்கள் பின்னூட்டமே ஒரு கவிதையாயிருக்கிறது. நன்றி அண்ணா...

***

@ பிரசாத் வேணுகோபால்
நன்றி அண்ணா... மீண்டும் வருக...

***

@ பிரேம்
உங்கள் நினைவுகளை கிளறிவிட்டதில் மகிழ்ச்சி... மிக்க நன்றி சகோ.. மீண்டும் வருக...

***

@ கே. ரவிசங்கர்
மிக்க நன்றி நண்பரே.. ஏதோ ரசனைக்கு வடிவமைத்தேன்... தங்களை ஈர்த்ததில் மகிழ்ந்தேன்.

//நீங்கள் அடுத்தக் கட்டத்திற்கு நகருங்கள்.//
உங்களைப்போன்ற நண்பர்களின் ஆதரவிருந்தால் கண்டிப்பாக அடுத்த கட்டத்தை அடைவேன்..
நன்றி...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...