இரவுகள்...
சயனம் தொலைத்தே
சரிகின்றன என் இரவுகள்...

குருதியில் தோய்த்த
என் கனவுகளைக் கவர்ந்து
விடிகிறது வானம்...

எப்போதும் போல்
என்னைக்கடந்துபோகும் மேகங்களுக்குள்
இரக்கமற்ற புன்னகையுடன் நீ...!

10 comments:

Jayaseelan said...

சயனம் தொலைத்தே
சரிகின்றன என் இரவுகள்...
அருமைங்க!!!

மதுரை சரவணன் said...

சூப்பர் ...வாழ்த்துக்கள்

விஜய் said...

தங்களின் கவிதை நடை அடுத்த பரிணாம நிலையை அடைந்து விட்டதாக கருதுகிறேன்.

மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் சகோ

விஜய்

சீமான்கனி said...

//எப்போதும் போல்
என்னைக்கடந்துபோகும் மேகங்களுக்குள்
இரக்கமற்ற புன்னகையுடன் நீ...!//


அருமை ரசித்தேன்...

கனவுக்குள்ளே
கத்திஎரியும் இரவுக்குள்
இறக்கம் காட்டட்டும் இனியவன்....

கவிநா... said...

@ ஜெயசீலன்

மிக்க நன்றி நண்பரே... மீண்டும் வருக..

***
@ மதுரை சரவணன்

மிக்க நன்றி நண்பரே, முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்... மீண்டும் வருக..

***

@ விஜய்

இடைவிடாது நீங்கள் அளித்துவரும் ஊக்கமே இதற்கு காரணம். என் கவிதை வரிகளை படிப்பதோடு நின்றுவிடாமல் ஊன்றிக் கவனித்து, அதன் மாற்றங்களையும் உணரும் உங்களின் அன்பு உள்ளத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்... எப்போதும் எனக்கு வேண்டும் உங்கள் ஆசிகள் அண்ணா....

***

@ சீமான்கனி

வழக்கம் தவறாத உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே. கவிதையான உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன்.. மிக்க நன்றி, மீண்டும் வருக தோழரே....

விஜய் said...

கண்டிப்பாக ஆசிகள் உண்டு தங்கையே !

நல்ல திறமைகளை கண்டு ஊக்குவிக்காமல் போவது அறிவீனம்.

எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு நல்ல வாழ்வை அளிக்க வேண்டுகிறேன்.

விஜய்

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

அஹமது இர்ஷாத் said...

Nice Poetry Kavina..Nice

Saravana kumar said...

எப்பவுமே எதையாவது தொலைட்சிட்டு தேடுறதே உங்களுக்கு வேலைய போச்சு.
//குருதியில் தோய்த்த
என் கனவுகளைக் கவர்ந்து
விடிகிறது வானம்...

நல்லா வாக்கிய அமைப்பு..!

கவிநா... said...

@ விஜய்

// கண்டிப்பாக ஆசிகள் உண்டு தங்கையே ! //

நன்றி அண்ணா....

***

@ கமலேஷ்

நன்றிங்க கமலேஷ்.... மீண்டும் வருக...

***

@ அஹமது இர்ஷாத்

நன்றிங்க இர்ஷாத்.... மீண்டும் வருக...

***

@ சரவணகுமார்

என்ன செய்றது சரவணா? கண்டது கனவாச்சே! தேடித்தானே ஆகணும்.. மிக்க நன்றி சரவணா...

--
அன்புடன்
கவிநா...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...