இ(க)யலும் இசையும்...!

தண்ணீர் குளத்தில் என்
கண்ணீர் கரைய
காலமெல்லாம் நீந்தியும்
கரை விரும்பாக் கயல் நான்...

இமைக்காத விழிகளின்
பாரம் தீர
இசைக்கவந்தாயோ நீருக்குள் ராகம்...!

கண்ணீருக்கு மருந்தாக
கவலைக்கு விருந்தாக
தனிமைக்குத் துணையாக

சோகம் உடைத்து
ஸ்வரம் பாட
என் தேவன் தந்த வீணையோ நீ!!!


Image Courtesy : Google

12 comments:

thendralsaravanan said...

என்ன ஒரு அழகாய் சிந்திக்கிறீர்கள்!
வாழ்த்துக்கள்!

Kurinji said...

Very nice...
kurinji kudil

சீமான்கனி said...

கயல் மீட்டும் யாழ்!!
கவிதை கண்ணீரு(தண்ணீரு)க்குள்ளும் கனமாய் தண்ணீரு இருக்கு...சோகம் தராமல் அந்தவிரல் சுகம் மீட்டட்டும்...வாழ்த்துகள் தோழி.......

கணேஷ் said...

அருமையான கற்ப்பனை..ரெம்ப நல்லா இருக்கு.

Saravana kumar said...

நல்லா இருக்கு கவியும் படமும்

கவிநா... said...

@ தென்றல் சரவணன்

மிக்க நன்றி தோழி... தங்கள் பாராட்டுகளே மேலும் சிந்த்திக்கவைக்கிறது.

கவிநா... said...

@ குறிஞ்சி

நன்றி சகோ...

கவிநா... said...

@ சீமான்கனி

//கவிதை கண்ணீரு(தண்ணீரு)க்குள்ளும் கனமாய் தண்ணீரு இருக்கு...சோகம் தராமல் அந்தவிரல் சுகம் மீட்டட்டும்...//

ம்ம்ம். சரி நண்பரே.. அந்த மீனுக்குச் சொல்கிறேன்..
வாழ்த்துகளுக்கு நன்றி. மீண்டும் வருக...

கவிநா... said...

@ கணேஷ்....

மிக்க நன்றி கணேஷ்...

கவிநா... said...

@ சரவணக்குமார்

ரொம்ப நன்றி சரவணா... :)))

விஜய் said...

கயல் மீட்டும் வீணை அழகு

வாழ்த்துக்கள்டா

விஜய்

Vishnu... said...

ஆகா ..அருமையான கவிதை கவி !
மிக மிக அழகு .. படமும் கவி !

அன்புடன்
விஷ்ணு ..

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...