நேற்றிரவு பெய்த மழை!நேற்றிரவு பெய்த மழையில்


தலை துவட்டிக்கொண்ட அடர்மரங்கள்
குளித்து அழுக்ககற்றிக்கொண்ட சாலைகள்
புகைப்படலம் நீங்கிய கட்டிடச்சுவர்கள்
பூத்துச்சிரிக்கும் வேலியோர மலர்ச்செடிகள் 

தேங்கியிருக்கும் நீரில் குதித்து
விளையாடிக்களிக்கும் சேரிச்சிறுவன்

வேதனை....

மழைக்குமில்லை
மழலைச் சிறுவனுக்குமில்லை...
9 comments:

Kousalya said...

//தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்//

வாழ்த்துக்கள் காயத்ரி !

நேற்று உங்க ஊரில் மழையா ? :))

இப்ப கவிதை பற்றி,

உன் மனதில் இருக்கும் உணர்வுகள் வார்த்தைகளாய் !

மழை மண்ணை மட்டும் குளிர்விக்கவில்லை, சிறுவனின் மனதையும் !!

கவிதை பிடிச்சிருக்குமா...உன்னையும்!

sulthanonline said...

super kavithai

Saravana kumar said...

நாங்க எல்லாம் மழை வந்தா ஜாலி மூட்ல இருந்தா நனைவோம்., இல்லைனா பால்கனில உக்காந்து டீ குடிச்சுட்டு வேடிக்கை பார்ப்போம்.,

ஆனா நீங்க கவிஞர்கள் கவிதை எழுதுறீங்க, கலக்குங்க

விஜய் said...

உண்மைதான்

வாழ்த்துக்கள்

விஜய்

கமலேஷ் said...

மழை பார்க்கும் மனசு
ரொம்ப நல்லா இருக்குங்க..

அஹமது இர்ஷாத் said...

ம‌ழை'யை ப‌ற்றிய‌ க‌விதை என்றால் மிக‌வும் பிடிக்கும்..இதுவும் பிடித்த‌து..

முரளிகுமார் பத்மநாபன் said...

அட நீங்களும் மழைக்கவிதைதானா? குட் குட் :-)

அன்புடன் மலிக்கா said...

மழை ரசிகை நான். மழைக்கவிதையையும்தான். அருமையாக இருக்கு கவிநா. வாழ்த்துக்கள்..

Vishnu... said...

அருமை கவி ...வாழ்த்துக்கள்.. ..!!
அன்புடன்
விஷ்ணு ..

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...