சில நேரங்களில்!!!


சில நேரங்களில்!!!
ஊமை விழிகளின் உயிர்வலி கூட புரிவதில்லை
பேசும் இதழ்களின் பிதற்றல்களும் ஒலிக்கின்றன.
சில நேரங்களில்!!!
நா வறழும் நேரம் நீர் கூட கிடைப்பதில்லை
நீரால் இழுக்கப்பட்டு பிணம் கூட கிடைப்பதில்லை
சில நேரங்களில்!!!
சோகத்தின் தருணங்களில் இரு விழி நீர் கூட விழுவதில்லை
சிரிப்பின் சிகரத்திலும் இதழ் கூட விரிவதில்லை
சில நேரங்களில்
சில நிகழ்வுகளில் - சிக்கித்தவிக்கும்
சில மனிதர்கள்!!!

5 comments:

மஞ்சூர் ராசா said...

நிர்ப்பந்தங்கள் என கொள்ளலாமோ..

இந்த கவிதையை இன்னும் நன்றாக செதுக்கியிருக்கலாமோ?

கோர்வையாக இல்லை.

Hari Kumar said...

It's very nice

Vishnu... said...

உண்மை உணர்த்தும் வரிகள் தோழியே ...
கவிதை கவர்கிறது மனதை கொஞ்சம் வித்யாசமாக ...

அன்புடன்
இனிய தோழன்
விஷ்ணு ..

ramesh said...

உண்மை உணர்த்தும் வரிகள் தோழியே ...
i like kavithai
by ramesh

ஜாஃபர் அலி (ஹரன்) said...

//சில நேரங்களில்!!!
ஊமை விழிகளின் உயிர்வலி கூட புரிவதில்லை
பேசும் இதழ்களின் பிதற்றல்களும் ஒலிக்கின்றன.//

எதிர்வினை என்பது நம் வினையைக் கொண்டமைவது அல்ல; அது எதிரில் இருப்பவரின் பிரதிபலிப்புத் தன்மையைப் பொருத்தது. ஆகவேதான் பிதற்றல்களைக் கொண்டாடும் இவர்களால், உயிர்வலியை உணரக்கூட முடிவதில்லை.

//நா (வறழும்) வறளும் நேரம் நீர் கூட கிடைப்பதில்லை
நீரால் இழுக்கப்பட்டு பிணம் கூட கிடைப்பதில்லை
சில நேரங்களில்!!!//

அப்பப்பா.. எங்கேயோ போயிட்டீங்க.
குவளை நீரைத் தந்து தாகம் தீர்க்காத உலகம், பின்னொரு நாள் கொல்லும் வெள்ளமாய்த் தந்து சிரிக்கும் என்பதை இவ்வளவு பூடகமாகத் தரமுடியுமா.. என வியக்கிறேன். அதுவும், திரும்பி வரக்கூட இயலாமல் ‘தொலைந்து' போன நிலையைக் கூறும் வார்த்தைகள் (பிணம் கூடக் கிடைப்பதில்லை) அற்புதம்.

வாழ்த்துக்களுடன்
ஹரன்.

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...