கனவுக்குள்...


நேற்று என் கனவில் நீ இல்லை!...

விழிகளுக்குள்ளே நீ விளையாடிக்கொண்டிருக்க
உறக்கம் எங்கே வருகிறது
கனவுகள் காண?

உறங்காத என் கண்களுக்கு ஓய்வுகொடு..
இன்றொரு நாள் இடம் மாறிவிடு...

கண்களுக்குள்ளிருந்து கனவுக்குள்..

உறங்கிக்கொள்கிறேன் ஒரு நாளாவது...

2 comments:

Siva said...

கற்பனையும் கவிதையும் ரொம்ப நல்லா இருக்கு...
இந்த புகைப்படம் இந்த கவிதைக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு....
எந்த கவிதைக்கும் சினிமா posters- விட இந்த மாதிரி posters-a வைங்க.....
இதுவரை அதிகம் பாக்காத ஒரு போஸ்டர்,
கேட்க்காத ஒரு கவிதைக்கு எப்பவுமே ஒரு தனி மரியாதை உண்டு....

காயத்ரி said...

நன்றிங்க சிவா,
உங்கள் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்..
முடிந்தவரையில் நான் திரைத்துறை அல்லாத படங்களை தேர்வு செய்ய முயற்ச்சிக்கிறேன், முடியாத பட்சத்தில் தான் ஒரு சிலவற்றைத் தேர்வு செய்கிறேன். இனி கொஞ்சம் கூடுதல் முயற்சி எடுத்துக்கொள்கிறேன் படங்களைத் தேர்வு செய்ய...

மிக்க நன்றி... தொடர்ந்து வரவேற்கிறேன் உங்கள் கருத்துக்களை...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...