உள்ளப்பூவே!


அவள் கோலமிட்டு முடிக்கையில்
சிறையாகிவிட்டிருந்தேன் அவளிட்ட
கோலத்தின் கோடுகளுக்குள் புள்ளிகளாய்...

அவள் பின்னலிட்டு முடிக்கையில்
சிறையாகிவிட்டிருந்தேன் சீவிமுடித்த
சிகையின் சிக்கலுக்குள் மல்லிகையாய்...

அவள் மாலையிட்டு மணமுடிக்கையில்
சிறையாகிவிட்டிருந்தன மலர்கள்
என் கைகளுக்குள் அட்சதையாய்...

என் உள்ளத்துக்கும் உள்ளங்கைப்
பூக்களுக்கும் மட்டுமே தெரியும்
இது ஒருதலைக்காதலின் திருவிளையாடலென்று...

4 comments:

முத்து said...

//அவள் மாலையிட்டு மணமுடிக்கையில்
சிறையாகிவிட்டிருந்தன மலர்கள்
என் கைகளுக்குள் அட்சதையாய்//

மறுபடியும் அருமையான வரிகள்..

காயத்ரி said...

நன்றி முத்து... தொடர்ந்து வரவேற்கிறேன்...

vims said...

Nice pomes.... expreesing the ture feelings of love....great going...
expecting more pomes...

காயத்ரி said...

உள்ளத்தை பகிர்ந்த VIMS உங்களுக்கு என் நன்றி... தொடரும் என் கவிதைகளை தொடர்ந்து வாசிக்க வேண்டுகிறேன்..

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...