காதல் நினைவே!




உன் நினைவுகளைத் தேடிப்
பயணிக்கிறது என் நெஞ்சம்…

காரிருள் மெளனத்தைச்
சுமந்த கருவேலங்காட்டின்
அடர்ந்த நிழல் வடிகட்டி அனுப்பிய
சன்ன வெயிலாய்…

மேகங்களைத் தொட்டுவிட்ட
மலையின் மேனியைத்தொட்டு
பூத்துச் சிரிக்கும் மலர்களின்
புன்னகையை வருடிவந்து
சலசலக்கும் நீரோடையாய்…

ஆள் அரவமற்ற கானகத்தில்
அடர்ந்து படர்ந்து
பாரியிடம் தேர் பெற்ற
முல்லைக் கொடியில் முகிழ்த்த 
முதல் பூவாய்…

என்றும் சுகமாயும் சுகந்தமாயும்
உணர்கிறேன் உன் நினைவுகளை… - நீயும்
கவர்கிறாய் என் கனவுகளை….

13 comments:

Sakthivel said...

அழகிய கவிதை . மௌன மொழி பேசும் காதலை அழகாக பேசுகிறது உங்கள் கவிதை . வாழ்த்துகள்

சீமான்கனி said...

அழகான கவிதை தோழி...நானும் தொடர்ந்து பயணிக்கிறேன்...

S.சதீஷ்குமார் MCA Asst.Professor said...

en iniya ennangalai ungal kavithoguppal vittuch selgeren
ivan
satheeshkumar

BoopathyRaja said...

Its really a nice one...
en nenjai sila nimidam varudi sendrathu

காயத்ரி said...

அன்புள்ள
சக்தி,
சீமாங்கனி,
சதிஷ்குமார்,
பூபதி ராஜா
இணைய நண்பர்களுக்கு
என் இதயம் கனிந்த நன்றிகள்...

Marimuthu Murugan said...

//
ஆள் அரவமற்ற கானகத்தில்
அடர்ந்து படர்ந்து
பாரியிடம் தேர் பெற்ற
முல்லைக் கொடியில் முகிழ்த்த
முதல் பூவாய்… //

அருமையான வரிகள்...

மிகவும் நன்றாக உள்ளது..

காயத்ரி said...

இனிய நன்றிகள் முத்து...

pandi said...

நன்றி

Vith@g@n said...

கருவேலங்காட்டின்
அடர்ந்த நிழல் வடிகட்டி அனுப்பிய
சன்ன வெயிலாய்…



ரூம் போட்டு யோசிப்பீங்களோ?
அருமையான வரிகள்...

Pinnai Ilavazhuthi said...

அற்ப்புதமான வரிகளில் அழகாக சொல்லி இருக்கின்றிர்கள் வாழ்த்துக்கள்

Tamilthotil said...

கவிநாவிற்கு,
நினைவுகளைத் தேடிய உங்கள் நெஞ்சத்தின் பயணம் அழகு.
அருமையான வரிகள் என்று என்னால் சொல்ல முடியாது. ஏனெனில்
இதை வரிகளாக என்னால் பார்க்க இயலவில்லை.
பாரதியார் ஒர் கவிதையில் சொல்லியிருப்பார். ”சொல் புதிது” என்று.
பலர் பயன்படுத்திய சொல்லாக இருப்பினும் ஒரு கவிஞன் அந்த
சொல்லை கையாளுகையில் அந்த சொல்லில் இருந்து புது பிரபஞ்சத்தையே
படைக்கிறான். அது வரை அந்த சொல்லுக்கு இருந்த பொருளைத் தாண்டி
பல புது புது பொருள்கள் உருவாகிறது. உங்களின் கவிதையிலும் ஒரு புது உலகத்தை காண்கிறேன்.
காரிருள்மெளனம், அடர்ந்த நிழலுடைய கருவேலங்காடு சன்ன வெயிலை
வடிக்கட்டி அனுப்புகிறது. வரிகளைக் காட்சிப்படுத்தி கண் முன்னே நிறுத்துகிறீர்கள். வடிகட்டும் பொழுது சத்தமின்றி இருக்குமா?
கேள்வி மனதில் எழுகிறது. நிச்சயம் இருக்காது தான்.ஆனால் காதலில் எல்லாமே தலைகீழாகத் தானே நிகழ்கிறது. நினைவுகள்
சலசலக்கும் நீரோடையாய், கவிநா எந்த பொருளில் எழுதினீர்களோ?
மேகத்தை தொடும் மலை எனக்கு இமயமாகத் தான் தெரிகிறது.அந்த
நீரோடை நீண்டு கங்கையாகத் தெரிகிறது. அந்த நினைவுகளின் புனிதம்
அந்த வரிகளில் தெரிகிறது. இறுதியில் ”முல்லைக்கு தேர் கொடுத்த பாரி” என்று
மட்டுமே இது வரை கையாண்ட வரிகள், "பாரியிடம் தேர் பெற்ற முல்லை" என்று புதிதாக கையாளப் பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம்.

Unknown said...

i wish u to continue this

கவிநா... said...

@ பாண்டி
மிக்க நன்றி.... மீண்டும் வருக தோழரே...

***

@ ராஜா
மிக்க நன்றி... தானாகவே வருதுங்க... :)

***

@ இளவழுதி வீரராசன்
மிக்க நன்றி நண்பரே... மீண்டும் வருக...

***

@ தமிழ்ராஜா
நான் எழுதிய கவிதையை விட, அதனை பிரித்து, தொகுத்து நீங்கள் கொடுத்த விமர்சனம் மிக அழகு...
இதனை பொறுமையாக படித்து வாழ்த்திய உங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பரே..
மீண்டும் வருக....

***

@ ஜெயா
மிக்க நன்றி தோழி...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...