மேகக்காதலி...!

மிதக்கும் மேகங்களில்
ஒருத்தியாய் நான்...

காற்றின் அசைவுக்கு நகர்வதாய் - உன்
காதலின் அசைவுக்கு இசைகிறேன்...

உன்னில் பருகிய காதலை
மண்ணில் பொழிகிறேன் மழையாக...

மண்ணைச்சேர்ந்த காதல் மழை
மீண்டும் என் மடிசேர்கிறது...

இதோ...

மிதக்கும் மேகங்களில் ஒருத்தியாய்
மீண்டும் நான் - உன்

காதலைப் பருகப்பருக...
தீராத தாகத்தில்...

படம் உதவி - நன்றி நண்பர் விஷ்ணு...

16 comments:

Saravana kumar 9629455729 said...

நான் தோத்துட்டேன்.நல்ல கற்பனை, அருமையான படம்.
// காதலைப் பருகப்பருக...
தீராத தாகத்தில்...

வார்த்தைகள் எளிமையாகவும், அருமையாகவும் இருக்கிறது.

D.R.Ashok said...

:)

Vishnu... said...

அருமையான கவிதை கவி ..

வித்தியாசமான கற்பனை ..
அருமையான வரிகள் ..

வாழ்த்துக்கள் தோழியே ..
இனியும் எழுதுங்கள் //

பிரியமுடன்
விஷ்ணு ..

விஜய் said...

எப்பொழுதும்போல் உங்கள் டச்

வாழ்த்துக்கள் சகோதரி

விஜய்

seemangani said...

படித்ததும் அந்த மேகக்காதலி மீது ஒரு மோகக்காதலே வந்து விடுகிறது...அழகு கவிதை தோழி...வாழ்த்துகள்...

Kolipaiyan said...

// காதலைப் பருகப்பருக...
தீராத தாகத்தில்... //

மதுரை சரவணன் said...

//மண்ணைச்சேர்ந்த காதல் மழை/

வாழ்த்துக்கள்.கவிதை அருமை.

இளவழுதி வீரராசன் said...

//காற்றின் அசைவுக்கு நகர்வதாய் - உன்
காதலின் அசைவுக்கு இசைகிறேன்...
//
அருமையான வரிகள்... கற்பனையின் வெளிப்பாடு காற்றை போல.....
வாழ்த்துக்கள் சகோதரி

காயத்ரி said...

//வார்த்தைகள் எளிமையாகவும், அருமையாகவும் இருக்கிறது.//

ரொம்ப நன்றி சரவணா...

காயத்ரி said...

மிக்க நன்றி நண்பர் திரு. அசோக்...

காயத்ரி said...

//வித்தியாசமான கற்பனை ..
அருமையான வரிகள் .. //மிக்க நன்றி நண்பர் விஷ்ணு... இந்த கவிதையின் அழகில் உங்களது பங்கு மிகப்பெரியது... நன்றி...

காயத்ரி said...

//எப்பொழுதும்போல் உங்கள் டச் //

மிக்க நன்றி நண்பர் திரு.விஜய்.. தொடரவேண்டும் உங்கள் ஆதரவு..

காயத்ரி said...

//படித்ததும் அந்த மேகக்காதலி மீது ஒரு மோகக்காதலே வந்து விடுகிறது...//

மகிழ்ச்சியாய் இருக்கிறது நண்பரே... மிக்க நன்றி திரு.சீமாங்கனி...

காயத்ரி said...

நன்றி திரு.கோழிப்பையன் ...

காயத்ரி said...

//கவிதை அருமை.//

மிக்க நன்றி திரு. மதுரை சரவணன்...

காயத்ரி said...

//கற்பனையின் வெளிப்பாடு காற்றை போல.....
வாழ்த்துக்கள் சகோதரி.//

மிக்க நன்றி உங்களின் வாழ்த்துக்களுக்கும், ரசனைக்கும்... நன்றி சகோதரரே... (இளவழுதி வீரராசன்...?

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...