கனவுகள் கவர்ந்த உறக்கம்...எங்கோ இலக்கின்றிச் செல்லும்
பறவையின் நுனிச்சிறகைப்
பிடித்துக்கொண்டு பறப்பதாக ஒரு கனவு...

இருண்மை தேசத்தில்
வெடித்தெழும்பும் ஒளிப்பிரளயத்தினின்று
தேவதை உதிப்பதாக ஒரு கனவு....

கைப்பறித்து  மண்ணிலிட்ட விதை
நீர் விடும் முன்  நெடுமரமாக
நிமிர்வதாய் ஒரு கனவு...

கனவின் பொருள் புரியாமல்
சாமத்தில் விழித்தெழும்
சாபம் பெற்றவளாய் நான்...

32 comments:

ganesh said...

இங்கு சொன்ன கனவுகள் நல்லாத்தானே இருக்கு..

பின்ன எதுக்கு சாபம் பெற்று இருக்க வேண்டும்...))

நல்லா இருக்கு..கனவு..

சௌந்தர் said...

என்ன சாபமா எதுக்கு ஏன் ஏன்...

சௌந்தர் said...

கனவின் பொருள் புரியாமல்
சாமத்தில் விழித்தெழும்
சாபம் பெற்றவளாய் நான்.///

சரி சரி அதுக்கு பிறகு தூங்குனீங்களா

விஜய் said...

நீர் விடும் முன் நெடுமரமாக கவிதைகளில் வளரும் தங்கைக்கு வாழ்த்துக்கள்

விஜய்

thendralsaravanan said...

கனவுகளுடன் நீண்ட தூரம் பயணித்த தோழியே,சாபம் பெற்றதால் தான் கவிதை பெட்டகம் எங்கள் வசமானது.வாழ்த்துக்களுடன்,
தோழி,
தென்றல் சரவணன்.

அரசன் said...

கவி வரிகள் அருமை

D.R.Ashok said...

:)

Thanglish Payan said...

superb ..

Kousalya said...

//கைப்பறித்து மண்ணிலிட்ட விதை
நீர் விடும் முன் நெடுமரமாக
நிமிர்வதாய் ஒரு கனவு...//

இந்த மாதிரி கனவிற்கு அர்த்தம் நான் சொல்லட்டா காயத்ரி...? இங்கே சொல்லமுடியாது. மெயில் செக் பண்ணு ஓ.கே...!!

ganesh said...

Kousalya said...

இந்த மாதிரி கனவிற்கு அர்த்தம் நான் சொல்லட்டா காயத்ரி...? இங்கே சொல்லமுடியாது. மெயில் செக் பண்ணு ஓ.கே...!! ///


இது எல்லாம் ரெம்ப ஓவர் அக்கா..அது என்ன தனியா...என்னை திட்ட மட்டும் சேர்ந்து ப்ளாக்ள திட்டுரிங்க...

இருங்க அடுத்த கதை எழுதுறேன்))))

கவிநா... said...

@ கணேஷ்

வாங்க....
கனவுகள் நல்லாத்தான் இருக்கு, ஆனா அர்த்தம் தெரியலையே!! நல்லா தூங்கிட்டிருக்கும்போது உங்களை எழுப்பினாதான் தெரியும், அது வரமா, சாபமா-னு?

ரொம்ப நன்றிங்க கருத்துக்கு.

கவிநா... said...

@ சௌந்தர்

அதெல்லாம் நித்ய நித்திரை அதுக்கு பிறகு.
நமக்கு தூக்கம் தான் எல்லாமே!! :)))

நன்றிங்க சௌந்தர்....

கவிநா... said...

@ விஜய்.

என் வளர்ச்சிக்காக வாழ்த்திக்கொண்டே இருக்கும் அண்ணாவுக்கு நன்றிகள்...

கவிநா... said...

@ தென்றல் சரவணன்

ம்ம்ம்... உங்கள் அன்பில் நெகிழ்கிறேன்... மிக்க நன்றி... உங்கள் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்...

கவிநா... said...

@ அரசன்

மிக்க நன்றிங்க அரசன். மீண்டும் வருக...

கவிநா... said...

@ D.R.அசோக்

என்னங்க சகோ! என் கவிதையைப் படிச்சு சிரிப்பு வந்துருச்சா? :)))
மிக்க நன்றிங்க... மறுபடியும் வாங்க..

கவிநா... said...

@ கௌசல்யா

அக்கா... என் கனவைப் பார்த்து ஒரு நல்ல பலனா சொல்லுங்க.
நன்றி அக்கா...

கவிநா... said...

@ கணேஷ்

ஐயோ... அடுத்த கதையா? சண்டை போட தெம்பு இல்லையே!??!! :)))

ganesh said...

ஐயோ... அடுத்த கதையா? சண்டை போட தெம்பு இல்லையே!??!! :))) ///

சரி விடுங்க எழுதலை...))))

கவிநா... said...

அடடே...!! இப்படி சொன்னா எப்படிங்க?

ganesh said...

அப்ப....எழுதலை விடுங்க சரி))))

இது சரியா??)))

ganesh said...

நான் அது சும்மா சொன்னேன்...ஒரு கதை எப்படியோ தெரியாம எழுதிட்டேன்)))

கவிநா... said...

ம்ம்ம்... பதிவு போட்டுட்டீங்களா? வந்து பார்க்கறேன்.

Saravana kumar said...

அழகனா சாபம். கவிதையும் தான்

logu.. said...

mmm.. nallathanirukku...

Kalidoss said...

உங்கள் கவிதைகள்.மிக ரசித்தேன்..புத்தாண்டு வாழ்த்துக்கள்..

தமிழ்தோட்டம் said...

புகைப்படத்திற்கு அழகு சேர்பதே உங்கள் கவி வரிகள் தான்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

கவிநா... said...

@ சரவணக்குமார்

மிக்க நன்றி சரவணா...

கவிநா... said...

@ லோகு

ரொம்ப நன்றிங்க லோகு...

கவிநா... said...

@ காளிதாஸ்

ரொம்ப நன்றிங்க சகோ. முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.

கவிநா... said...

@ தமிழ்த்தோட்டம்

ஓ.. மிக்க நன்றிங்க. மகிழ்ச்சி...

Vishnu... said...

அழகு கவி .. அருமை ..

//எங்கோ இலக்கின்றிச் செல்லும்
பறவையின் நுனிச்சிறகைப்
பிடித்துக்கொண்டு பறப்பதாக ஒரு கனவு...//

நல்ல பயணம் ...தான் ... !!

//இருண்மை தேசத்தில்
வெடித்தெழும்பும் ஒளிப்பிரளயத்தினின்று
தேவதை உதிப்பதாக ஒரு கனவு....//

இதுவும் நல்ல ஒரு புத்துணர்வு தான் ...

//கைப்பறித்து மண்ணிலிட்ட விதை
நீர் விடும் முன் நெடுமரமாக
நிமிர்வதாய் ஒரு கனவு...//

அற்புதம் .. அதிவேகம் ..மனோகரம் ...!!!

//கனவின் பொருள் புரியாமல்
சாமத்தில் விழித்தெழும்
சாபம் பெற்றவளாய் நான்...//

கொஞ்ச நாளில் புரிந்து விடும் கவி ..
சாபம் ..என்று எதற்கு நினைக்கிறாய் ??


ம்ம் ..அருமையான கவிதை கவி ..
வார்த்தைகளும் எண்ணங்களும் மிக மிக அருமை !!!
ஆனால் ..இந்த சோகமான கவிதை எல்லாம்
இப்ப வேண்டாம் .. சரியா ..இனியும் காலங்கள் இருக்கிறது ..
இப்படி எல்லாம் சோகமாய் எழுத ....:))

அன்புடன்
விஷ்ணு ...

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...