௨ ௪ ௭...ஒவ்வொரு பொழுதும்
ஓடோடி வந்து

காதோரக் கூந்தல்
கலைத்துப் பேசிய கொஞ்சல்களும்...

உடல் சிலிர்க்கச் செய்த
குளிர் தீண்டல்களும்...

ஆடை கலைத்துச்
சீண்டிய செல்லக்குறும்புகளும்...

இன்னும்...

சுவாசமாகிச் சேர்ந்து
உதிரத்தில் உயிர் வரைந்த

காற்றே!!!

உன்னைக் காதலிக்கிறேன்....


தலைப்புக் குறிப்பு : ௨ ௪ ௭ (2 4 7 - நான் உன்னைக் காதலிக்கிறேன்) 


Image Courtesy : Google

11 comments:

Kurinji said...

அருமை !

குறிஞ்சி குடில்

logu.. said...

nallarukku.

கவிநா... said...

@ குறிஞ்சி

நன்றி சகோ... வருகைக்கும் வாழ்த்துக்கும்... மீண்டும் வருக..

கவிநா... said...

@ லோகு

மிக்க நன்றி சகோ... மீண்டும் வருக...

thendralsaravanan said...

நல்ல ரசனை! நீரை விலை கொடுத்து வாங்குகிறோம்! நீங்கள் பாடிய காற்றை ?!!!!!

கணேஷ் said...

அருமையான வரிகளுடன் கடைசி வரியில் நல்ல திருப்பம்..ரெம்ப நல்லா இருக்கு..முக்கியமா..
//சுவாசமாகிச் சேர்ந்து
உதிரத்தில் உயிர் வரைந்த/

இந்த வரி ரெம்ப பிடிச்சி இருக்கு..

கவிநா... said...

@ தென்றல் சரவணன்

// நீரை விலை கொடுத்து வாங்குகிறோம்! நீங்கள் பாடிய காற்றை ?!!!!! //

"ஒரு காலத்தில் பிராணவாயு இலவசமாகக் கிடைக்கும்" என வரும் சந்ததியினருக்கு கதை சொல்லும் காலம் வந்தாலும் வரலாம் தோழி... :(

கருத்துக்கு நன்றி தென்றல்...

கவிநா... said...

@ கணேஷ்

ம்ம்ம்... எனக்கும் பிடித்த வரிகள்... :)))
மிக்க நன்றிங்க கணேஷ்.....

விஜய் said...

௩ ௫

சீமான்கனி said...

///காதோரக் கூந்தல்
கலைத்துப் பேசிய கொஞ்சல்களும்...

உடல் சிலிர்க்கச் செய்த
குளிர் தீண்டல்களும்...//

கவிதையின் அழகு காற்றை மட்டும் காதலிக்கச் செய்யவில்லை கவிநா வின் வரிகளையும்...வாழ்த்துகள்...தோழி....

Shiva sky said...

nice kavi- vungal kavi....

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...