ஓர் இதயத்தவம்...!


உன் நினைவுகளைப் பதியமிட்டு
கண்ணீரூற்றி வளர்க்கிறது பிரிவு...
நம் காதலை...

என் முட்பாதையிலும்
பூக்கள் முளைக்கிறது...

இந்தப் பாலை மனத்திலும் 
சோலை மணக்கிறது...

உணர்வுக்கருவில் 
உதித்த இம்மலருடன் 
உனக்கெனச் செய்வேன்
ஓர் இதயத்தவம்...

நீ வரும் வழி நோக்கி...!!!


Image Courtesy:- Google.
9 comments:

gobi said...

Very superb kavithai pa this picture also very nice. But one thing i dont know while seeing the picture u creating kavithai or after creating u find out the picture.....

MANO நாஞ்சில் மனோ said...

//இந்தப் பாலை மனத்திலும்
சோலை மணக்கிறது...//

கலக்கல் கவிதை....

கணேஷ் said...

ம்ம ம் நோக்குங்க...))

உன் நினைவுகளைப் பதியமிட்டு
கண்ணீரூற்றி வளர்க்கிறது பிரிவு...
நம் காதலை...///

உண்மையில் நடக்குமா இப்படி???

நல்லா இருக்குங்க கவிதை..எப்போதும் போல் கவிதைக்கு மிக பொருத்தமான படம்..

thendralsaravanan said...

நல்ல காத்திருப்பு!தொடரட்டும்.

சீமான்கனி said...

காதலின் பிரிவில் பூத்த இதயம்...ஆஹா...அழகு வாழ்த்துகள்...தோழி

சீமான்கனி said...

காதலின் பிரிவில் பூத்த இதயம்...ஆஹா...அழகு வாழ்த்துகள்...தோழி

Kousalya said...

//பூக்கள் முளைக்கிறது..//
அது எப்படி ? செடிதானே முளைக்கும் ?டவுட்டு#

//சோலை மணக்கிறது..//

சோலை எப்படி ? அங்கே இருக்கிற பூக்கள் தானே மணக்கும் ? டவுட்டு#

//உதித்த இம்மலருடன்//

பூ எப்படி உதிக்கும்? டவுட்டு#

ம்...

ஓ இது காதல் ? அதுதான் எல்லாம் கொஞ்சம் மாறி போச்சு !! :))

கணேஷ் @@
//நல்லா இருக்குங்க கவிதை//

அட, உனக்கு கவிதை ரசிக்க தெரியுமா ? இப்பதான் தெரியுது. உன் பிளாக் பக்கம் போறதே இல்லையா ? :))

காயத்ரி உன் கவிதை அழகு...படம் சரியான தேர்வு...

தாமதமாக வந்ததுக்கு பொறுத்துக்கோ.

ஆனந்தி.. said...

//கணேஷ் @@
//நல்லா இருக்குங்க கவிதை//

அட, உனக்கு கவிதை ரசிக்க தெரியுமா ? இப்பதான் தெரியுது. உன் பிளாக் பக்கம் போறதே இல்லையா ? :))//

என் தோழி கௌஸ் சொன்னதையே நானும் சொல்கிறேன்...ரிப்பீட்டு...:))))

ஆனந்தி.. said...

அழகான படம்..அழகான கவிதை...அழகான டெம்ப்ளேட் ....எல்லாமே அழகு கவிநா:)))

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...