நாணமே!!!சொல்லத்துடிக்கும் மனதை
மெல்லத்தடுக்கிறது நாணம்...
மனம் அழுகிறது என்றாலும்,
ஊமை கண்ட கனவாய்
உள்ளத்திலே என் காதல்...

விழிகளில் வெள்ளமாய்
வழிகிறது என் உள்ளம்...

கண்ணீரில் நனைந்தது என்
கண்மை மட்டுமல்ல
காவலாய் நின்ற நாணமும்தான்...

இதோ சொல்லிவிட்டேன் என் காதலை...
வென்றுவிட்டேன் நாணக்காவலை...

இனி...
உன் உள்ளங்கையில்
என் உள்ளம்...

2 comments:

Vishnu... said...

மனம் திறந்த மடலாய் கவிதை ..
அருமை தோழியே .. விரைவில் உங்கள் உள்ளத்தின் ஆசை நிறைவேற வாழ்த்துக்களுடன்..


பிரியமுடன்
விஷ்ணு ..

காயத்ரி said...

அன்பு நண்பர் விஷ்ணுவுக்கு, மிக்க நன்றி வாழ்த்துக்களுக்கு..

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...