நீ வரவேண்டும்...


ஒற்றைக் கதவறையின்
ஒற்றைச் சாவியையும் தொலைத்துவிட்டு
அடைபட்டுக் கிடக்கும்
அபலையாய் உணர்கிறேன்...
நீ இல்லாத என் வாழ்க்கையை...

குளிர் தென்றல் வீசும்
சன்னல் வெளிச்சமாக இல்லாவிட்டாலும்

கூரை வழியே கிடைக்கும்
சன்ன வெளிச்சமாகவாவது வருவாயா?

என் வாழ்க்கையில் ஒளியூட்ட...

1 comment:

Vishnu... said...

கவிதை அருமை கவித்தோழியே ..
குளிர் தென்றல் வீசும் ஜன்னல் வெளிச்சமே
உங்களை வந்தடையும் ..வாழ்த்துக்களுடன்
விஷ்ணு ..

Post a Comment

உங்களின் பயனுள்ள நேரத்தை எனக்காகச் செலவிட்டு, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... தொடர்ந்து வந்து வாழ்த்த வேண்டுகிறேன்...